மாற்று காணிகள் வழங்க ஆறுமுகன் தொண்டமான் உறுதி

0
395
arumugan thondaman promise give other land up country people

மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் ஸ்டெர்தன் வெஸ்டன் தோட்டத்தில் உள்ள 76 குடும்பங்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உறுதியளித்துள்ளார். arumugan thondaman promise give other land up country people

சீரற்ற காலநிலையால் ஹட்டன் ஸ்டெர்தன் வெஸ்டன் தோட்டப் பகுதியில் உள்ள 3 தொடர் குடியிருப்பு தொகுதிக்கு மேலே உள்ள பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு காரணமாக அங்கிருந்து 76 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில், குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஆறுமுகன் தொணடமான், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளார்.

இதன்போது, குறித்த மக்களுக்கான மாற்றுக் காணியாக, அந்த தோட்டப் பகுதியில் உள்ள 19ம் இலக்க மலையின் காணியை வழங்குமாறு ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்தோடு கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய கட்டிட ஆய்வாளர்கள் ஊடாக குறித்த காணியை பரீசீலனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் புஸ்ப குமாரவுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தேசிய கட்டிட ஆய்வாளர்கள், குறித்த காணியை முழுமையாக பரீசிலனை செய்து அறிக்கை ஒன்றை சமர்பித்ததன் பின்னர், குறித்த மக்களுக்கு அந்த காணி உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
arumugan thondaman promise give other land up country people

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites