நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கிருஷ்ணா என்றழைக்கப்படும் கிருஸ்ண பிள்ளை கிருபானந்தன் கொலை தொடர்பில் உளவுபார்த்ததாக கூறப்படும் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் Krishna Shooting Arrest
கொழும்பு புளூமெண்டல் பிரதேசத்தில் வைத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணா செட்டித்தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஜூலை மாதம் 9 ஆம் திகதி இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
39 வயதான கிருஷ்ணா சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததுடன் கொழும்பு, வடக்கில் தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்று வந்தார்.
இவருக்கு இருந்து வரும் மக்கள் ஆதரவு காரணமாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.