யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பாக, சட்ட மா அதிபரிடம் சபாநாயகர் ஆலோசனை கோரியிருந்தார். Sri Lanka Attorney General Report Vijayakala Legal Action Tamil News
இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம், தமது ஆலோசனையை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு அனுப்பியுள்ளது.
இதன்படி , முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளையும் தமது திணைக்களம் ஆய்வு செய்தது என்றும் சபாநாயகருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இதுபற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு தமது அறிக்கையை காவல்துறை மா அதிபரிடம் கையளித்திருந்தது. அவர் அதனை சட்டமா அதிபருக்கும் அனுப்பியிருந்தார்.
இந்த அறிக்கையை மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் தலைமையிலான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவாளர் குழு கவனமாக ஆராய்ந்த பின்னர், தமது பரிந்துரைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்தனர் என்றும் சட்டமா அதிபர் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com