முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவுறுத்தியுள்ளது. vijayakala maheshwaran again action research order parliament order
விடுதலை புலிகளின் கையோங்க வேண்டும் என விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கைக்கு அமைய மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாரே சட்டமா அதிபர் திணைக்களம் சபாநாயகருக்கு அறிவுருத்தியுள்ளது.
அத்துடன், நாடாளுமன்றம் விஜயகலா மகேஸ்வரன் விடயத்தில் ஏதேனும் நடவடிக்கையினை மேற்கொள்ள தீர்மானித்திருப்பினும் அதனை நாடாளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம் உள்ளிட்ட அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அண்மையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தன.
இது தொடர்பில் 59 பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.
அத்துடன், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரிடமும், அரசாங்க அதிகாரிகள் 14 பேரிடமும் மற்றும் 30 ஊடகவியலாளர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இதனை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
vijayakala maheshwaran again action research order parliament order
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com