Women Menses Time Alcohol Drink Habit Tamil
பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடு மாதவிடாய் சுழற்சி என அறியப்படுகிறது. இந்த காலகட்டங்களில் பெண்களின் உடலில் மிக மோசமான வலி உணர்வு ஏற்படுவது வழக்கம்.
மாதத்தில் ஒருமுறை, அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுவாகவும் சிலருக்கு 3 முதல் 5 நாட்கள் வரையும் இந்த சுழற்சி நடக்கிறது. அந்த நாட்களை எண்ணி பெண்கள் அஞ்சுவதும், முகம் சுழிப்பதும் இயற்கையானது.
மாதவிடாய் அடைவதுக்கு முன்கூட்டியே பெண்களுக்கு சில அறிகுறிகள் தென்படுவதுண்டு. சிலர் மிக கொடூரமான வலியை உணர்கின்றனர். மேலும் சிலர் உடல் வலி, தலைவலி, கோபம், மன உளைச்சல் உள்ளிட்ட கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில், மேல் குறிப்பிட்டது போல் மாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தினால் செயற்கையான பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மாதவிடாய் காலம் மட்டுமல்லாது, பொதுவாக மது அருந்தும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு சற்று அதிகமான பிரச்னைகள் ஏற்படுவதாக, அமெரிக்க ஆராய்ச்சி குழு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக, மாதவிடாய் வேளையில் ஏற்படும் வலியானது மாரடைப்புக்கு சமமானது எனவும் கூறப்படுகிறது.
வலியுணர்வை கண்டு அஞ்சாமல் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றி பெரும் இன்னல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு.
அதாவது, டீ அருந்துவது, குடிநீர் அதிகமாக அருந்துவது, கொழுப்பு அடங்கிய உணவுப் பொருட்களை தவிர்ப்பது, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை போதுமான அளவு உணவில் சேர்ப்பதன் மூலம் நல்ல மாற்றத்தை பெண்கள் உணர முடியும்.
<<தமிழ் ஹெல்த் தளத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட செய்திகள்>>
உடலுறவுக்கு நீங்கள் அடிமையா? இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…!
குழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…!
சிசேரியனுக்கு பிறகு உடனே செக்ஸா? கவனம் தேவை…!