கைதியாக வேண்டியவரை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி – அபராதத்தை தானே செலுத்தினார்

0
1189
police officer saved suspects wife paying court fine

(police officer saved suspects wife paying court fine)

டுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கண்ணீர் விட்டு கதறிய கணவனின் குரலைக் கேட்டு அபராதத்தை தானே செலுத்தி சந்தேகநபரான மனைவியை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

டுபாயின் ரஷீடியா பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரியான அப்துல் ஹாடி இன்று நீதிமன்ற அலுவலகத்தில் தன் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒருவர் என் மனைவியைத் தயவு செய்து காப்பாற்றுங்கள், என் மனைவி சிறைக்குச் செல்லக் கூடாது. எங்கள் 7 மாதக் குழந்தை தாயின்றி தவித்துப் போய்விடும் என்று அவரிடம் பதற்றமாக கூறியுள்ளார்.

உடனே, அவர் அந்த நபரை சமாதானப்படுத்தி பதற்றப்படமால் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது அவர், நான் சிறுதொழில் செய்து வருகிறேன். அந்தத் தொழிலில் திடீரென நட்டம் ஏற்பட்டது.

என் மனைவியின் பெயரில்தான் என் தொழிலை மேற்கொண்டு வருகிறேன். இதனால் அனைத்துக் காசோலையிலும் அவர் தான் கையெழுத்துப் போடுவார்.

ஆனால், கொடுத்த காசோலைகள் அனைத்தும் பணமின்றி திரும்பி விட்டதால், சம்பந்தப்பட்ட நபர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் என் மனைவிக்குப் பதில் நான் சிறைக்குச் செல்ல தயார் என்று கூறியும் பலனில்லை. என் உறவினர்கள், நண்பர்கள் யாரும் எனக்கு பணவுதவி செய்ய முன்வரவில்லை.

நீதிமன்றத்தில் அபராதம் கட்ட தவறியதால் என் மனைவிக்கு 100 நாட்கள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

என் மனைவி சிறைக்கு சென்றுவிட்டால், என் 7 மாதக் குழந்தை தாயில்லாமல் எப்படியிருக்கும்? என் மனைவிக்குப் பதில் என்னை சிறையிலடைக்க உதவி செய்யுங்கள் என்று கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் கையில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அப்துல் ஹாடிக்கு மனம் கலங்கிப் போனது.

இதையடுத்து சற்றும் யோசிக்காமல் அந்த நபர் செலுத்த வேண்டிய 10,000 திர்ஹம் அபராதப் பணத்தையும் அவரே செலுத்தியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை நீதிமன்றம் விடுவித்தது.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் வெளியானதால், அதிகாரிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

(police officer saved suspects wife paying court fine)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites