முதலமைச்சர் பதவி விலகுமாறு கோரினால் நான் பதவி விலகுவதற்குத் தயாராகவே உள்ளேன் என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். Northern Provincial Council Ministers Total Number Issue Tamil news
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் அனந்தி இவ்வாறு கூறினார்.
சந்திப்பின்போது, வடக்கு மாகாண அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைப் போக்க மாகாணசபையின் அனைத்து அமைச்சர்களும் ஏன் பதவி விலகுவதற்கு முயற்சிக்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் அனந்தியிடம் கேள்வியெழுப்பினர்.
பதிலளித்த அவர் வடக்கு மாகாண ஆளுநர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது வடக்கு மாகாண அமைச்சரவையின் குழப்ப நிலையைப் போக்க மாகாண அமைச்சர்கள் பதவிவிலக வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஊடகங்கள் வாயிலாக இதை நாள் அறிந்தேன். ஆனால் இது தொடர்பில் எமக்கு எழுத்து மூலமாகக் கோரப்படவில்லை.
அவ்வாறு ஆளுநர் எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுத்தால் நான் அதனைப் பரிசீலிக்கத் தயாராக உள்ளேன். நான் விரும்பி மாகாண சபையில் அமைச்சராக வரவில்லை. எனவே வடக்கு மாகாண முதல்வர் என்னைப் பதவி விலகக் கோரினாலும் நான் விலகத் தயாராகவே உள்ளேன். என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- தனியார் பேரூந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தடை
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில்