சுமார் இரண்டு வருட காலமாக பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த தனியார் கல்வி ஆசிரியர் ஒருவரை பண்டாரகமை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். (Teacher sexually abused student two years)
தனது சகோதரி எந்தநேரமும் ஏதோ சிந்தனையில் இருப்பதை அவதானித்த அவளின் சகோதரன், அவளுக்கு வந்த தொலைபேசி அழைப்பின் விபரத்தை வினவிய போதே இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
கணித பாடத்திற்கு ‘ஏ’ சித்தியைப் பெற வேண்டும் என்பதற்காக கணித பாடத்திற்கான விசேட வகுப்பிற்கு பண்டாரகமை நகரிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு இந்த மாணவி சென்றுள்ளார்.
இந்த மாணவி குறித்த வகுப்பிற்கு சென்ற போது, அங்கு கல்வி கற்பிக்கும் கணித ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடி, அவளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அதனை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இதனை எவரிடமோ கூறினால் இணையத்தளத்தில் பிரசுரிப்பேன் என்;றும் குறித்த ஆசிரியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அன்று முதல் இதுவரை பலமுறை குறித்த மாணவிக்கு இவ்வாறு மேலதிக வகுப்பிற்கு என அழைத்து பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளதோடு, அவளுக்கு ஒரு மாத்திரையை கொடுத்துள்ளார்.
12 மணித்தியாலங்களுக்கு பின்னர் குடிப்பதற்கு இன்னொரு மாத்திரையையும் கொடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மாத்தளை பிரதேசத்தில் பாடசாலை அதிபர் ஒருவரை திருமணம் முடித்திருந்த இந்த நபருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதாகவும் 12 வருடங்களுக்கு முன்னர் மனைவியை விட்டுப் பிரிந்துள்ளார்.
அத்துடன், இன்னொரு மாணவியை ஏமாற்றி, பண்டாரகமை பிரதேசத்துக்கு வந்து, இவர்கள் கணவன் மனைவி போன்று வாழ்ந்துள்ளதாகவும் தற்போது இந்த பெண்ணுக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இந்த 52 வயதான நபரை ஹொரணை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- கூரையில் ஏறி பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்
- யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு ; பொலிஸார் வாகனப் பேரணி
- 65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- 24 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்; இந்தியரான கோடீஸ்வர வர்த்தகர் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Teacher sexually abused student two years