லண்டனில் குழந்தை அழுததற்காக இரு இந்தியக் குடும்பங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.British Airways Baby bad plane tamil news
இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சரக அதிகாரி ஒருவர் குடும்பத்துடன் கடந்த மாதம் 23-ஆம் தேதி லண்டனில் இருந்து பெர்லினுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் சென்றார். ஓடுதளத்தில் பயணித்த போது தமது 3 வயது மகன் தனி இருக்கையில் அமராமல் அழுததால், தமது மனைவி அவரத் தூக்கி வைத்ததைக் கண்டு விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த ஒருவர் மிரட்டியதோடு, விமானத்தை மீண்டும் முனையத்துக்குத் திருப்பி தங்களை இறக்கிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தங்களுக்குப் பின்னால் இருந்த மற்றொரு இந்தியக் குடும்பம் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்த காரணத்தால் இறக்கிவிட்டு, இனப்பாகுபாட்டை சுட்டிக் காட்டுவது போல் வசைபாடியதாக, விமானப் போக்குவத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தாங்கள் ஒருபோதும் பாகுபாட்டை ஊக்குவித்ததில்லை என்றும், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
tags ;- British Airways Baby bad plane tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- காதலனின் இறுதி சுவாசத்தின்போது கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி
- இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளருக்கு நேர்ந்த சோகம்..!!
- பிரித்தானியாவில் பச்சை குத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
- பிரித்தானியாவில் மாயமான பெண் 8 நாட்களுக்கு பின்னர் சடலமாக கண்டுபிடிப்பு: 3 பேர் கைது
- பிரித்தானியாவில் உலகிலேயே மிக நீளமான வெள்ளரிக்காயை பயிரிட்டு சாதனை படைத்த இந்திய விவசாயி