பதுளை பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். (Badulla Pradeshiya Sabha members protest today)
பதுளை பிரதேச சபை வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் உருத்திரதீபனும் கலந்துகொண்டார்.
கடந்த இரண்டாம் திகதி பதுளை பிரதேச சபை வளாகத்தில் வைத்து பதுளை பிரதேச சபையின் உறுப்பினரான முரளிதரன் என்பவரை பதுளை பகுதி முச்சக்கரவண்டி சாரதிகளினால் தாக்கப்பட்டு, பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புக்கள் திருட்டுத்தனமாக பதிவு
- வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது
- ஞானசாரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று
- பர்தா விவகாரம் : வெடித்தது சர்ச்சை
- தகாத வார்த்தைகள் பேசிய தோட்ட அதிகாரிகள் ; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- க.பொ.த உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவிகள் மூவர் விபத்தில் சிக்கி படுகாயம்
- பொதுமக்களே அவதானம் ; சந்தையில் நிறமூட்டப்பட்ட பருப்பு வகைகள் விற்பனை
- சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Badulla Pradeshiya Sabha members protest today