”தரமணி” படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் மம்முட்டி – அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ”பேரன்பு” படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரம் புதிரானதாக இருக்கும் என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் திகதி ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. Director Ram says Peranbu Tamil movie tamil news
இந்நிலையில், பேரன்பு படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது.. :-
“இப் படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ புகழ் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.எல்.தேனப்பன் தயாரித்து இருக்கிறார். பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்ட இந்த படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் வெளியாகிய படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
tags :- Director Ram says Peranbu Tamil movie tamil news
<<MOST RELATED CINEMA NEWS>>
* பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)
* அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!
* கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி சர்கார் படப்பிடிப்பு இடைநிறுத்தம்..!
* ஆடு – மாடுகளைப் போன்று அனைவரையும் பிரித்துக் காட்டுகின்றேன் : பிக்பாஸ் வைஷ்ணவி சவால்..!
* 2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!
* வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!
* விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!
* ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!