தென்கிழக்கு லண்டன் அருகே Deptford பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Boy Fire London victim kills tamil news
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் 45 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் தீ பிடித்த வீட்டிற்குள் சென்று சோதனை மேற்கொள்ளும் பொழுது, மர்மமான முறையில் 7 வயது சிறுவன் இறந்து கிடப்பதை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுவனின் இறப்பில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தீயணைப்பு படையினர், தீ விபத்தில் முதல் தளம் சிறிதளவு சேதமடைந்துள்ளது. ஆனால் இரண்டாவது தளம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, முதல் தளத்திலிருந்து குதித்த இரண்டு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
tags :- Boy Fire London victim kills tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- காதலனின் இறுதி சுவாசத்தின்போது கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி
- இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளருக்கு நேர்ந்த சோகம்..!!
- பிரித்தானியாவில் பச்சை குத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
- பிரித்தானியாவில் மாயமான பெண் 8 நாட்களுக்கு பின்னர் சடலமாக கண்டுபிடிப்பு: 3 பேர் கைது
- பிரித்தானியாவில் உலகிலேயே மிக நீளமான வெள்ளரிக்காயை பயிரிட்டு சாதனை படைத்த இந்திய விவசாயி