திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி, விஜய் நடிப்பில் உருவாகி வரும் “சர்கார்” படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. Sarkar Tamil Movie Shoot Stopped tamil news
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
“சர்கார்” படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றுள்ளதால் அவர் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
மேலும், கருணாநிதி மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, “சர்கார்” படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்தும் கண்ணீர் மல்க கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
tags :- Sarkar Tamil Movie Shoot Stopped tamil news
<<MOST RELATED CINEMA NEWS>>
* பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)
* கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!
* வாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)
* 2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!
* வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!
* விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!
* 12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!