சீதுவை அமந்தொளுவ பிரதேசத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் காணிக்கை பெட்டிகள் மூன்றை உடைத்து, அதில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (Theft Catholic church Seeduwa complaints police)
இந்த தேவாலயத்தின் பிரதான கதவை உடைத்து, தேவாலயத்தினுள் இருந்த காணிக்கைப் பெட்டி மற்றும் வெளியே வைக்கப்பட்டிருந்த இரு காணிக்கை பெட்டிகளையும் உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, குறித்த தேவாலயத்தின் சிலை ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன், இங்கு சுற்றியுள்ள பிரதேசங்களில் ஹெரொயின் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை அதிகமாக நடைபெறுவதனால் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களால் இவ்வாறான திருட்டு சம்பவங்களும் நடைபெறுவதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரியும் பெண்களின் தங்கச் சங்கிலிகள் பறிக்கும் சம்பவங்களும் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி பலி
- மாணவனின் கையடக்கத் தொலைபேசியில் 300 ஆபாசக் காட்சிகள்; மயங்கி விழுந்த தாய்
- நண்பனின் காதலனை இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நம்பிக்கை துரோகி
- வெளியாளர்களுக்கு காசுக்காக காணி பகிர்ந்தளிப்பு; தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
- ஈஸி கேஷ் (ez cash) முறையில் ஹெரொயின் போதைப்பொருள் விற்பனை
- உணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Theft Catholic church Seeduwa complaints police