மானிப்பாயில் பொலிசார் சுற்றிவளைப்பு – பதுங்கியிருந்த ஆவா உறுப்பினர்கள் கைது

0
606
jafna manippai police round up 10 ava members arrest latest

மானிப்பாயில் ஆவா குழு உறுப்பினர்கள் என தெரிவித்து 10 பேர் கை செய்யபப்பட்டுள்ளனர். jafna manippai police round up 10 ava members arrest latest

மானிப்பாய் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக, மானிப்பாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

மானிப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 வாள்கள் மற்றும் 4 உந்துருளிகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முன்னிலை செய்யப்படவுள்ளனர்.
jafna manippai police round up 10 ava members arrest latest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites