எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. united people freedom alliance discus party leaders receive leader
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைவர்களுடன் எதிர்வரும் சில தினங்களில் கலந்துரையாடி, அதன்போது மேற்கொள்ளப்படும் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், எதிர்கட்சி தலைவர் தொடர்பில், சபாநாயகர் தமது இறுதி தீர்மானத்தை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அறிவிக்க உள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர், சபாநாயகர் தமது இறுதி தீர்மானத்தை அறிவிப்பார் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் நீல் இத்தவெல நேற்று குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி, ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வாதம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு, அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் எழுந்தது.
இந்தநிலையில், அண்மையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி, தமது அணிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வேண்டும் என கோரி 69 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை சபாநாயகரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
united people freedom alliance discus party leaders receive leader
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com