திருகோணமலையில் வலம்புரி சங்குடன் நால்வர் கைது!

0
1098
Trinco Police Arrested 4 Person Sale Valampuri Sangu

திருகோணமலையில் நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வலம்புரி சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த நான்கு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த வலம்புரி சங்கை சந்தேக நபர்கள் 60 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், வலம்புரி சங்கை விலைக்கு வாங்குவது போல் நடித்து சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு 1 கோடி ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites