வாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..!

0
826
whatsapp adds group calling voice

(whatsapp adds group calling voice)
தகவல் பரிமாற்ற பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப் செயலி இன்றியமையாத தேவையாகி விட்டது. அதை மேலும் வலிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

வாட்ஸ்அப் செயலிக்கான பயன்பாட்டில், தனிப்பட்ட அல்லது குழு தகவல்களை டெலிட் செய்யும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேவையை பல ஆண்டுகளாக பயனர்கள் எதிர்பார்த்து வந்தனர். இதை தொடர்ந்து பெரியதாக எதிர்பார்க்கப்பட்ட குரூப் வீடியோ கால் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அப்டேட் செய்து உள்ளது.

ஆனால் அதற்கு முன்னதாக வாட்ஸ்அப் கால் வசதியில் குரூப் கால் வசதி வெளியிடப்படும். அதன் மூலம் பயனர்கள் ஒரே நேரத்தில் பலருடன் கான்பிரன்ஸ் கால் போல பேச முடியும். அதிகப்பட்சமாக இந்த அம்சத்தில் 5 பேருடன் ஒரே நேரத்தில் பேசலாம்.

இதனுடைய பயன்பாட்டை கணக்கிட்ட பிறகே, வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. 5 பேர் வரை அதிகப்பட்சமாக ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் வீடியோ கால் பேசலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் பயன்பாட்டில் உள்ள ’வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால்’ வசதி தொடர்ந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பில் ஐ-போன்களிலும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

உலகின் முதன்மையான சேட்டிங் செயலியாக வாட்ஸ்அப் இருந்தாலும், வீடியோ கால், வாட்ஸ் அப் கால் வசதி போன்ற வசதிகளில் பெரியளவில் அது வரவேற்பு பெறவில்லை.

IMO, Google Duo, போன்ற செயலிகளில் குரூப் போன் கால், குரூப் வீடியோ கால் போன்ற வசதிகள் பெரியளவில் வரவேற்பில் உள்ளன. அதை முறியடிக்கும் விதத்தில் தான் வாட்ஸ்அப் தற்போது குரூப் வீடியோ கால், குரூப் வாட்ஸ்அப் கால் வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tamil News Group websites

whatsapp adds group calling voice