வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் நேற்று நேரடியாகச் சென்று கள ஆய்வில் ஈடுபட்டதன் பிரகாரம் வவுனியாவில் அனுமதி இல்லாத தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவ நிலையங்களில் சோதனைகள் இடம்பெற்றது. Vavuniya Medical Clinics Check North Health Minister Action Tamil News
அதனடிப்படையில் உரிய அனுமதி இன்றி கதிர்வீச்சு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இரு வைத்தியசாலைகள், ஆயுர்வேத மருத்துவம் பயின்று விட்டு ஆங்கில மருந்துகள் வழங்கிய இரு வைத்திய நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.
இந்த கள ஆய்வில் வவுனியாவில் மூன்று தனியார் வைத்திய சிகிச்சை நிலையங்கள் , இரண்டு மருந்தகங்கள், இரண்டு வைத்தியசாலை தரத்தில் உள்ள நிறுவனங்கள் நேரடியாக பார்வையிடப்பட்டது.
மருத்துவ துறையில் சட்ட விரோதமான செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- மத்தல விமான நிலையத்தினால் மாதாந்தம் 2500 இலட்சம் ரூபா செலவு
- வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு