இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
679
Today Horoscope 01-08-2018

 

இன்று! (Today horoscope tamil 01-08-2018)

இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 16ம் தேதி, துல்ஹாதா 18ம் தேதி,
1.8.18 புதன்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 8:17 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் காலை 10:07 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி.
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூரம்
பொது : பெருமாள், காமதேனு வழிபாடு.

மேஷம்:

உங்களின் முக்கிய செயல் ஒன்று நிறைவேற தாமதமாகலாம். கடந்தகால அனுபவம் நல்ல படிப்பினை தரும். தொழில் வியாபாரத்தில் பெற்ற அனுகூலத்தை தகுந்த முறையில் பாதுகாப்பீர்கள். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும்.

 

ரிஷபம்:

குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத் தொடர்பு பலம் பெறும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.

மிதுனம்:

உங்கள் செயல் நிறைவேற இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும்.எதிர்மறையாக இருந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் உழைப்பீர்கள்.உபரி வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கடகம்:

அடுத்தவரின் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத்தேவை நிறைவேற தாமதமாகலாம்.தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். மிதமான பணவரவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் பாதுகாப்பது நல்லது.

சிம்மம்:

உங்களின் மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனையின் அளவு சீராக இருக்கும். புதிய வகையில் செலவு உருவாகும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது நல்லது.

கன்னி:

உங்களின் மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனையின் அளவு சீராக இருக்கும். புதிய வகையில் செலவு உருவாகும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது நல்லது.

துலாம்:

நீண்ட நாள் முயற்சி நிறைவேற வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவர். தொழில் வியாபாரத்தில்; நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் திருப்தியளிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:

எதிர்வரும் சிரமங்களை தாமதமின்றி சரி செய்யவும். நல்லவர்களின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வருமானம் சுமாராக இருக்கும். வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும்.

தனுசு:

எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சி அபரிமிதமான முன்னேற்றம் தரும். கூடுதல் பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள் .பணியாளர்களுக்கு பரிசு, பாராட்டு கிடைக்கும்.

கும்பம்:

பிறரை விமர்சிக்க உங்களை சிலர் துாண்டுவர். தொழில் வியாபார நடைமுறை மந்தகதியில் இயங்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

மீனம்:

முக்கிய விஷயத்தில் சுமுகத்தீர்வு ஏற்படும். பணியை முழுமனதுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி நிலை உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்