சமீபத்தில் ஐஸ்வர்யாராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடனும் லண்டன் சென்றிருந்தார்.Aishwarya Abhishek conflict fans shocked
லண்டனில் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யாராய்க்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் குழந்தை ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டாராம்.
அதாவது, விமான நிலையத்திற்கு மூவரும் வந்த போது ஆராதயாவின் கையை பிடித்து ஐஸ்வர்யாராய் அழைத்து வந்தார். ஆராத்யாவின் மற்றொரு கையை பிடித்து அழைத்து வர அபிஷேக் முயன்றபோது அதை தவிர்க்கும் விதமாக குழந்தையை தன்னுடன் சேர்த்து ஐஸ்வர்யாராய் அணைத்துக் கொண்டார்.
ஆராத்யாவும் அபிஷேக்கை கண்டுபயந்த நிலையில், ஐஸ்வர்யாராயை கட்டிப்பிடித்துக் கொண்டார். இந்த காட்சிகளை சிலர் புகைப்படமாக எடுத்து இணையத் தளத்தில் பதிவிட்டனர்.
அதை காரணம் காட்டி ஐஸ்வர்யாராய், அபிஷேக் இடையில் மோதல் ஏற்பட்டிருப்பதாக இணையத் தளம் ஒன்றில் தகவல் வெளியானது. அதைக்கண்டு அபிஷேக் பச்சன் கோபம் அடைந்தார்.
இதுபற்றி அபிஷேக் கூறும்போது.. :-
”எங்களுக்குள் (அபிஷேக்-ஐஸ்வர்யாராய்) சண்டை என்பதுபோல் இணையத் தளத்தில் பொய்யான தகவல் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இதுபோல் நீங்கள் தொடர்ந்து தகவல் பரப்புவதன் மூலம் உங்களது தேவை என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் நீங்கள் பொறுப்புடன் இருந்தால் நான் அதை பாராட்டுவேன். உள்நோக்கத்துடன் இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம். நன்றி” என குறிப்பிட்டிருக்கிறார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!
* கலைஞரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு..!
* சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!
* விடுமுறைக்கு சென்றது கூடவா குற்றம்..? : கொந்தளிக்கும் டாப்ஸி..!
* ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
* வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!
* பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!
* மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!