தற்கொலைகளை தடுப்பதுதொடர்பாக விசேட கலந்துரையாடல்கள் புத்திஜீவிகள் சபையின் அங்கத்தவர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. suicide amount low growth Lankan health ministry report latest tamil news
தற்கொலை தடுப்பு சர்வதேச தினம் அடுத்த மாதம் பத்தாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இந்த கலந்துரையாடல்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இலங்கை சுமித்திரோ நிறுவனம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. தற்காலை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமது அமைப்பு பகிரங்க சித்திர போட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தற்கொலையை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே சித்திரப் போட்டியின் தொனிப்பொருளாகும். மன உளைச்சல், மனநோய் ஆகியன தற்கொலைக்கு முக்கிய காரணங்களாகும் என இவர்கள் தெரிவித்தனர்.
எவருக்கும் ஏதெனும் பிரச்சினை இருக்குமாயின் இலவசமாக ஆலோசனை வழங்குவதற்காக இலங்கை சுமித்திரோ நிறுவனம் 24 மணித்தியாலும் தயாராக இருப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை முயற்சியை தடுப்பது தொடர்பான தகவல்கள் மற்றும் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் 2003 ஆம் ஆண்டில், தற்கொலையை தடுக்கும் சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையில் வருடம் ஒன்றுக்கு சுமார் நான்காயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். வருடத்தில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சுமார் மூவாயிரமாகும்.
இருப்பினும் இலங்கையில் வருடம்தோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை குறைத்து வருவதை காணக்கூடியதாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்pபடத்தக்கது.
suicide amount low growth Lankan health ministry report latest tamil news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com