எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (Announcement GCE A/L Scholarship Examinations)
அதன்படி தரம்-5 இற்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இப்பரீட்சைக்கு 3 இலட்சத்து 55 ஆயிரத்து 321 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 67 ஆயிரத்து 765 சிங்கள மொழி மூல மாணவர்களும் 87 ஆயிரத்து 556 மாணவர்கள் தமிழ் மொழி மூல மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டுக்கான, க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 1ஆம் திகதி நிறைவடையவுள்ளன.
இம்முறை நாடளாவிய ரீதியில் மொத்தமாக 2 இலட்சத்து 44 ஆயிரத்து 146 பரீட்சார்த்திகள் பாடசாலை மூலமாகவும், 77 ஆயிரத்து 323 தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்கென 2 ஆயிரத்து 268 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முறை பாடசாலை மூலம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்களது சொந்த முகவரிகளுக்கும் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சையின் நிமித்தம், ஜுலை 31 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், தனியார் வகுப்புகள் எதனையும் நடத்துவதற்கு, பரீட்சைகள் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags :- Announcement GCE A/L Scholarship Examinations
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை