இங்கிலாந்தில் வெப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பனிமழை

0
332
Snowfall UK end heat

இங்கிலாந்தில் கடந்தவாரம் முழுவதும் அதிகரித்த வெப்பநிலைக்கு தற்போது கடும் பனிமழை பெய்து வெப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. (Snowfall UK end heat)

இங்கிலாந்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) பலத்த இடி மற்றும் காற்றுடன் பெய்த பனிமழை காரணமாக அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதோடு அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவு மின்னல் தாக்கி வருகின்றமையால் அப்பகுதிகளிற்கு திடீர் மின்சார துண்டிப்பு ஏற்படலாமெனவும், பனிமழையினால் போக்குவரத்துக்களும் ஸ்தம்பித்துள்ளன.

மேலும் அங்கு காணப்படும் Edinburgh, Birmingham, Luton மற்றும் Stansted விமான நிலையங்களிலிருந்து புறப்படவிருந்த விமானங்களை தற்காலிகமாக இரத்து செய்வதாக தேசிய விமான சேவைகள் நிலையம் அறிவித்துள்ளதோடு, தரைப் போக்குவரத்து மற்றும் கிழக்கு கடற்கரை ரயில் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :-  Snowfall UK end heat

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************