அண்மைக் காலங்களாக சிறைச்சாலைகளில் இடம்பெற்ற முறைகேடுகளைக் கட்டுப்படுத்த எதிர்வரும் வாரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். (Irregularities prisons morethan 50 officers transferred)
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சிறைக்கைதிகளுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில், தினமும் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு குறித்த அதிகாரிகளை மாற்றம் செய்வதாக சிறைச்சாலை சீர்திருத்தங்கள் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
மேலும் சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலைமையை நன்கு பரிசீலனை செய்து புலனாய்வு பிரிவை நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மாற்றப்பட்டுள்ள அதிகாரிகளில் நேர்மையான அதிகாரிகளும் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தலதா அத்துகோரள கடந்த 26 ஆம் திகதி சிறைச்சாலை புலனாய்வு பிரிவை நீக்கியதாக அறிவித்த பின்னரும் 27 ஆம் திகதி மாலை வரை இந்த அதிகாரிகளுக்கு மாற்றுப் பணிகள் நியமிக்கப்பட்டிருக்கவில்லை என சிறைச்சாலை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிறைச்சாலை புலனாய்வு பிரிவை நீக்கப்படுவதன் செய்தியை அறிந்தவுடன் உடனே அந்த பிரிவில் கடைமையாற்றிய அதிகாரிகள் சிலர் அதிகாரிகளின் குடியுருப்பு ஒன்றில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பிரதமர் நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்
- கைதடியில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்; அப்பகுதியில் பதற்றம்
- மனநலம் குன்றிய 15 வயது மகளை சீரழித்த தந்தை
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Irregularities prisons morethan 50 officers transferred