வவுனியாவில் பாலியல் தொழில் புரியும் பெண்கள் அதிகரிப்பு; சிரமத்தில் வர்த்தகர்கள்

0
1037

பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இளம் பெண்களால் வவுனியா மத்திய நகரில் கடை வியாபாரிகளுக்கு பெரும் இடைஞ்சல் அதிகரித்துக் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. Vavuniya Shop Owners Issue Accusing Municipal Council

வவுனியா பேருந்து நிலைய வர்த்தகர்கள் இது தொடர்பில் தெரிவிக்கும் போது,

அண்மைக்காலங்களாக ஒவ்வொரு மாத இறுதிப்பகுதியில் 20ஆம் திகதிகளுக்கு பின்னர் மத்திய நகரில் இளம் பெண்கள் பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் இப்பகுதிகளில் தரித்து நின்றுவருகின்றனர்.

நீண்டநேரமாக காத்திருப்பதுடன் தொலைபேசிகளிலும் தொடர்பு கொண்டு நீண்டநேரமாக பேசி வருகின்றனர். இவ்வாறு பல பெண்கள் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இதனால் இப்பகுதியில் சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றது. இப்பகுதிக்கு வரும் பெரும்பான்மை இனத்தவர்கள் சிவில் உடையில் அவர்களுடன் உரையாடலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வியாபார நிலையங்களுக்கு பொதுமக்களின் வரவு குறைந்து காணப்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை எவையும் பொலிசார் மற்றும் நகரசபையினரால் இடம்பெறவில்லை. எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகர சபையினால் கடந்த காலங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டபோதிலும் தற்போது கலாசார சீர்கேடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் ஆக்கபூர்வமாக இடம்பெறவில்லை என வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites