நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ஆரம்பமாகியது

0
568
TAMIL NEWS long lunar eclipse centuary starts indian scientists

(TAMIL NEWS long lunar eclipse centuary starts indian scientists)

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரகிரகணம் நேற்று இரவு 11.54 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திர கிரகணம், நள்ளிரவு கடந்தும் நீடித்து இருக்கும்.

இது சுமார் 6 மணி நேரங்களுக்கு மேல் நீடிக்கும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சந்திர கிரகணம் தொடர்பாக செவ்வியளித்த தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் சௌவுந்திரராஜ பெருமாள், இந்த சந்திர கிரணகத்தை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 5 தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மிக நீண்ட சந்திர கிரகணமான இதை பொதுமக்கள் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, மத்திய ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் காணலாம்.

(TAMIL NEWS long lunar eclipse centuary starts indian scientists)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites