ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் தகுதி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவுக்கு கிடையாது என வனவிலங்கு ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். (Kumar Sangakkara not eligible contest presidential election)
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்க தரப்பின் பொது வேட்பாளராக கிரிக்கெட் வீரர் குமார சங்ககாரவை களமிறக்க போவதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருவதாகவும் அரசியலுக்கு வருவதற்கான எவ்வித தகுதிகளும் இவருக்கு கிடையாது என்றும் ஏனெனில் இவர் ஒரு சிறந்த மனிதர் என்றும் அவர் கூறியுள்ளார்.
தாம் தொடர்ந்தும் முறையற்ற அரசியல் சூழலிலே வாழ்ந்து வருவதாகவும் இராணுவத் தளபதியாக இருந்த தன்னை இன்று பாதாள குழுவினரது பாதுகாப்பாளனாக சித்தரித்த அரசியல் நாளை இவரையும் முழுமையாக மாற்றிவிடும் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதே தமது நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர்,
அதற்காக பொது வேட்பாளரை களமிறக்கக்கூடாது என்றும் கடந்த 2015 மேற்கொண்ட தவறினை 2020 ஆம் ஆண்டும் ஐக்கிய தேசிய கட்சி தொடரக்கூடாது என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய சித்தப்பா
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டார் உடுவே தம்மாலோக தேரர்
- வாதுவையில் அரைநிர்வாணத்துடன் பெண்களை கட்டிப்பிடிக்கும் கிறீஸ் மனிதன்
- தங்கக்கட்டிகளுடன் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூவர் கைது
- வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஒட்டப்பட்டுள்ள திடீர் அறிவித்தல்கள்
- புகையிரத சங்கங்கள் இணைந்து திடீர் பணிப்புறக்கணிப்பில்
- 60 இலட்சம் ரூபாவுக்கு மேல் திருடிய நபர் வசமாக மாட்டினார்
- பாதாள உலக தலைவர்கள் எனக்கூறி கப்பம் கோரும் கும்பல்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Kumar Sangakkara not eligible contest presidential election