ஆசிரிய நியமன பழிவாங்கல்களை ஆதாரத்துடன் நிரூபித்தால் நிவாரணம்!

0
467
Teachers Appointments Revenges Akila Viraj Kariyawasam Statement

ஆசிரியர்களுக்கான நியமனங்கள் தொடர்பில் அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றிருந்தால், அதாரங்களுடன் நீதிமன்றத்தை நாடி நிவாரணங்களை பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். Teachers Appointments Revenges Akila Viraj Kariyawasam Statement

கடந்த கால அரசாங்கம் ஆசிரியர்களுக்கான நியமனங்களை அவர்களுக்கு ஏற்றவாறு மேற்கொண்ட போது ஆசிரியர் தொழிற் சங்கங்கங்கள் அமைதி காத்ததாகவும் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்போது தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு எந்த விதமான அரசியல் தலையீடுகளின்றி கல்வி நிர்வாக சேவைகளினூடாக நியமனங்களை வழங்கப்படும் போது அதற்கு ஆசிரியர் தொழிற் சங்கங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவ்வாறு பொருத்தமற்றவர்களுக்கு நியனமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கருதினால் தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் முறையீடு செய்து நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. எனவே இவ்வாறான சதித் திட்டங்களுக்கு பொது மக்கள் ஒருபோதும் துணைபோககூடாது என்றும் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பத்தரமுல்லையிலுள்ள கல்வியமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites