விஜயகலாவுடன் ஒரே மேடையில் அமர்ந்த ரணிலுக்கு வந்த சோதனை!

0
656
Mahinda Protest Ranil Comments

ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் எனக் கூறியதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் , விஜயகலாவை ஒரே மேடையில் வைத்துக் கொண்டு, வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார் என கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Sri Lanka Joint Opposition Party Accusing Prime Minister Ranil

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையி லேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர், விஜயகலாவின் அறிவிப்பு தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவுக்கு அவரை அழைத்து வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டாரா? என கூட்டு எதிர்க்கட்சி கேள்வியும் எழுப்பியுள்ளது.

சிங்கள ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பிலேயே கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites