விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கனரக வாகனங்களினால் அழிப்பு

0
960
Bunkers destroyed heavy vehicles

வலி. தென் மேற்கு பிரதேச மானிப்பாய் பட்டிணத்தில் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திறந்த வெளியரங்கிற்கு பின்புறமாகவிருந்த விடுதலைப் புலிகளால் பெரும் பதுங்குகுழி அழிக்கப்பட்டுள்ளது. (Bunkers destroyed heavy vehicles)

சுகாதாரப் பிரிவினரின் சிபாரிசிற்கு அமைய பிரதேச சபையில் எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த பதுங்குகுழி கனரக வாகனங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் இந்தப் பதுங்குகுழிக்குள் வெள்ளம் தேங்கி நிற்பதனால் நுளம்புகள் உற்பத்தி பெருகுவதுடன், அங்கு துர்நாற்றமும் வீசி வருகின்றது.

குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு முறையிட்டதற்கு அமைய பதுங்குகுழியை நேரில் சென்று பார்வையிட்ட சுகாதாரப் பிரிவினர், பதுங்குகுழியை அழிக்க வேண்டிய அவசியம் குறித்து பிரதேச சபைக்கு சிபாரிசு செய்திருந்தனர்.

சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பிரதேச சபையில் எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பதுங்குகுழி அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுங்குகுழியில் இருந்து மீட்கப்பட்ட பெரும் இரும்புப் கேடர்கள் இப்பிரதேசத்திலுள்ள மயானங்களின் அபிவிருத்தி வேலைக்குப் பயன்படுத்தப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Bunkers destroyed heavy vehicles