முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

0
741
Association Relations Missing Persons Mullaithivu

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியிலுள்ள நீதிமன்றத்திற்கு அண்மையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (Association Relations Missing Persons Mullaithivu)

கடந்த 500 நாட்களாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்து, 500 நாள்களுடன் முடிவுறுத்தி தற்போது இந்தச் சங்கத்தை ஆரம்பித்துள்ளனர்.

யுத்த காலத்தின் போதும் அதற்கு பிற்பட்ட காலங்களிலும் இராணுவத்திடம் நேரடியாகக் கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட, கடத்திச் செல்லப்பட்ட தமது உறவுகளை தேடி கண்டுபிடித்துத் தருமாறு கோரி, தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் கடந்த 500 நாட்களுக்கு மேலாக போராட்டத்தை மேற்கொண்டும், இந்த உறவுகளுக்கான தீர்வு இன்னும் கிடைக்காத நிலையில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Association Relations Missing Persons Mullaithivu