பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் சிக்கினர்

0
595
tamilnews thanamalvila nine people arrested gambling money

(tamilnews thanamalvila nine people arrested gambling money)

தனமல்வில – ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் நீண்ட காலமாக இந்த சூதாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவர்கள் தனமல்வில, ஹம்பேகமுவ மற்றும் வெலிஓய போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பை மேற்கொண்ட தருணத்தில் அந்த இடத்திலிருந்து ஒரு லட்சம் ரூபா பணமும், சீட்டுக்கட்டுகளும், வேறு சில பொருட்களும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் சிலர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களை கைது செய்வதற்காக தொடர்ந்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் வெல்லவாய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

(tamilnews thanamalvila nine people arrested gambling money)

More Tamil News

Time Tamil News Group websites :