விஜயகலா உரையாற்றும் போது அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்….!

0
375
vijayakala maheshwaran again action research order parliament order

விடுதலை புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் உரையாற்றும் போது யாழ். நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்களிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொள்ள சபாநாயகரிடம் அனுமதி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ரங்க திஸாநாயக்கவிடம் குற்றத் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. state minister vijakala maheshwaran criticize LTTE organisation

கடந்த 2018. ஜூலை 2 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

விஜயகலாவின் உரை தொடர்பில் இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அறிக்கை சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டு பின்னர் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விசாரணையின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
state minister vijakala maheshwaran criticize LTTE organisation

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites