சம்பந்தனுக்கு தகுதியே இல்லை, அவர் ஒரு ஏமாற்றுக்காரர் : பசில்

0
618
sambanthan basil rajapaksa

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தனது கவலையை சம்பந்தன் வெளியிட்டுள்ளார். சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பில் கதைப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(sambanthan basil rajapaksa )

இதேவேளை தற்போது மாகாண சபை தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் காலம் தாழ்த்தி வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வருகின்றது. இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களை சம்பந்தன் ஏமாற்றி வருகின்றார்.

இது தொடர்பில் மேலும் தகவல் வெளியிட்ட பசில் ராஜபக்ஷ,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை மஹிந்த ராஜபக்ஷவே ஏற்படுத்தி கொடுத்தார்.

ஆனால் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த மாகாண சபைகளை இழந்து வருகின்றது.
இதன் மூலம் வடக்கு கிழக்கு மக்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆனால் இதனை மறந்து சுதந்திரக் கட்சியினுள் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து கதைத்துகொண்டிருக்கின்றார். இது தொடர்பில் கதைக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை.

சமஷ்டிக் கட்சியை அழித்த சம்பந்தன் இப்போது சுதந்திரக் கட்சி தொடர்பில் கதைப்பது வேடிக்கையாக இருக்கின்றது என்றார்.

 

Tags:sambanthan basil rajapaksa ,sambanthan basil rajapaksa ,sambanthan basil rajapaksa ,