யாழ். செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது!!

0
844
tamil news jaffna semmani sketalan rescued police security imposed

(tamil news jaffna semmani sketalan rescued police security imposed)

யாழ். செம்மணிப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை மனித எலும்புக் கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நீர்த் தாங்கியின் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதியிலேயே இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் தடயவியல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், நாளை நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மனித எலும்புக்கூடானது இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போனவர்களில் ஒருவரினுடையதாக இருக்கலாம் எனவும், குறித்த பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் புதைந்திருக்கலாம் என்றும் பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

(tamil news jaffna semmani sketalan rescued police security imposed)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites