காவல்துறையினர், Val-de-Marne இல் வைத்து, பெண் ஒருவரை கடத்திய வழக்கில் ஐவரை கைதுசெய்துள்ளனர். பெண்ணை கடத்தி அவரின் பெற்றோரிடம் இருந்து €700,000 யூரோக்கள் கேட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.(France woman kidnapped threatened pay € 7 lakh)
கடந்த ஜூலை 11 ஆம் திகதி, Chevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்பட்டார். 7 நாட்கள் குறித்த பெண்ணை Villejuif பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றுக்குள் மறைத்து வைத்திருந்துள்ளனர்.
குறித்த பெண்ணை அடித்து துன்புறுத்தல் போன்ற எதுவும் இடம்பெறவில்லை. கடத்தல்காரர்கள் அப்பெண்ணின் பெற்றோரிடம், பெண்ணை விடுவிக்க €700,000 யூரோக்கள் பணத்தினை கோரியிருந்தார்கள். ஆனால் 7ம் நாள் அந்த கட்டிடத்தில் இருந்து பெண் தப்பித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குற்றவாளிகள் ஐவரையும் கைது செய்தனர். அவர்களை காவல்துறையினரிற்கு முன்னதாகவே தெரியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இதற்கு முன்னதாக பலரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளதாகவும், அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags :- France woman kidnapped threatened pay € 7 lakh
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!
- Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!
- ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.