சுகயீனமுற்ற தனது 4 வயது குழந்தைக்கு சிகிச்சை பெறுவதற்காக கம்பொளை பொலிஸ் பிரிவில் உள்ள கலஹா கிராமிய வைத்தியசாலைக்கு சென்ற தாய் ஒருவரை, அந்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் திட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (Doctor attack 27 year old mother)
அத்துடன், குறித்த தாயை மருத்துவ உதவியாளர் ஒருவர் தாக்கியுள்ளதால் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாய் குழந்தையுடன் வைத்தியர் அருகில் சென்றபோது, குழந்தை அணிந்திருந்த பாதணிகளை கழற்றாமையினாலும் குழந்தை இருமியதனாலும் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கலஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸில் உள்ள முறைப்பாட்டின் படி, இந்த 27 வயதுடைய தாய் தனது 4 வயது பிள்ளைக்கு காய்ச்சல் மற்றும் இருமல் நோய் காரணமாக சிகிச்சை பெற கலஹா வைத்தியசாலைக்கு (கடந்த 16 ஆம் திகதி மாலை 3 மணிக்கு) சென்றுள்ளார்.
வைத்தியரிடம் செல்லும் நோயாளிகள் அனைவரும் காலணிகளை கழற்றி செல்ல வேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தது.
குறித்த தாய் தனது காலணிகளை கழற்றி உள்ளே செல்ல தயாராகும் போது, இவரின் குழந்தை இருமியுள்ளது.
குழந்தை காலணியை கழற்றும் முன்னர் இருமியதால் கோபமடைந்த வைத்தியர் ‘பிள்ளைகளை வளர்ப்பது இப்படியா? இருமுவது எப்படி என கற்றுக்கொடுக்கவில்லையா? மிருகங்கள் போல் பிள்ளைகளை வளர்ப்பதால், எங்களுக்கு தான் பிரச்சனை’ என்று வைத்தியர் திட்டியுள்ளார்.
அதற்கு இந்த தாய் ‘ஐயோ டாக்டர் இந்த சிறு குழந்தையை திட்டாதீர்கள். இன்னமும் ஒன்றும் புரியாது. சுகயீனமுற்றதனால் தான் இருமல் வருகின்றது. அதனை எப்படி கட்டுப்படுத்துவது’ என்று பதிலளித்துள்ளார்.
கோபம் கொண்ட வைத்தியர் உரத்த குரலில் உதவியாளரை அழைத்து ‘இந்த பெண்ணை வெளியே இழுத்து விடு’ என்று கூறியுள்ளார்.
அந்த இடத்திற்குச் சென்ற உதவியாளர் வைத்தியர் முன்னே இந்தப் பெண்ணை முகத்திலும், கன்னத்திலும் மற்றும் தலையிலும் தாக்கியுள்ளதுடன், கையையும் சுரண்டியுள்ளார்.
இதன் பின்னர் இந்த உதவியாளர் இந்த தாயை வெளியே தள்ளியுள்ளார். உடனே இந்த தாய் பேராதெனிய பல் மருத்துவ பீடத்தில் சேவை செய்யும் தனது தந்தைக்கு அறிவித்துள்ளார்.
உதடுகள் வீங்கியிருந்த மற்றும் நகங்கள் கீறிய அடையாளங்களுடன் இருந்த தனது மகளை அவர் உடனடியாக கண்டி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், இவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலஹா வைத்தியசாலையின் வைத்தியர் சிருமினி த சில்வா கூறுகையில், இந்த வைத்தியசாலை நிலத்திற்கு மாபிள் போடப்பட்டதனால் அனைவரும் பாதணிகளை கழற்றியே உள்ளே வரவேண்டும். இதற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
பிள்ளைக்கு நிறுத்த முடியாத இருமல் இருந்தது, நான் அதற்கு கைக்குட்டையை உபயோகிக்கச் சொன்னேன். உதவியாளர் அவளை வெளியே அழைத்துச் சென்றாள். தாக்கவில்லை’ என கூறினார்.
எனினும் கலஹா பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- அச்சுவேலியில் கம்பிகள், பொல்லுகளுடன் தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்
- சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை
- மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள் பசி, பட்டினியுடன் வீடு திரும்பும் அவலநிலை
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறுநீர் சோதனை செய்ய வேண்டும்
- அபிவிருத்தி உத்தியோகத்தர் கொலை; பெண் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Doctor attack 27 year old mother