பறக்கும் டாக்ஸி தயார் என கூறும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்

0
785
rolls royce unveils hybrid flying taxi farnborough

(rolls royce unveils hybrid flying taxi farnborough)
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனமானது “பறக்கும் டாக்சி” என்ற பெயரில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாகனம் செங்குத்தாக டேக் ஆஃப் ஆகி, தரையிறங்கும் வசதியை கொண்டிருக்கும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஹைப்ரிட் வாகனத்தை உருவாக்கும் திட்டத்தை முதல் முறையாக ஃபார்ன்பரோ விழாவில் அறிவித்தது. அடுத்த 18 மாதங்களுக்குள் செங்குத்தாக டேக் ஆஃப் ஆகி, தரையிறங்கும் வாகனத்தின் ப்ரோடோடைப் பதிப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி 2020-களில் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டு வானில் பறக்கலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் EVTOL விமானம் நான்கு அல்லது ஐந்து பேர் அமரக்கூடியதாகவும், 500 மைல் வரை பறக்கும் திறன், அதிகபட்சம் மணிக்கு 200 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

rolls royce unveils hybrid flying taxi farnborough

Tamil News