அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ நிறுத்தப்படும் சாத்தியம்? ஊவா முதலமைச்சர் நம்பிக்கை

0
470
tamil news next president electorate namal suitable chamara

(tamil news next president electorate namal suitable chamara)

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவைத் அல்லாது ராஜபக்ஸ குடும்பத்தில் வேறு யாருக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படாது என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

ராஜபக்ஸ குடும்பத்தில் நாமலைத் தவிர வேறு யாருக்கும் இந்த வேட்பாளர் பதவி வழங்கப்பட மாட்டாது.

ராஜபக்ஸ சகோதரர்கள் எவருக்கும் இந்தப் பதவி வழங்கப்படமாட்டாது என நான் கூறியதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இது நடைபெறாது என்பதனால் தான் கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார் என்பதைத் தெரியாது ஒவ்வொருவரையும் கூறிக் கொள்கின்றனர் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

(tamil news next president electorate namal suitable chamara)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites