சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வேண்டும்

0
609
tamil news thilakratna dilshan urged death sentences good

(tamil news thilakratna dilshan urged death sentences good)

போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்பதாக கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், போதைப்பொருள் குற்றவாளிகள் மாத்திரமின்றி சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

“நாட்டில் போதைப்பொருள் பாவனை, பாலியல் குற்றங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மரண தண்டனையை அமுல்படுத்துவது சரியான தீர்மானமாக அமையும்.

இல்லையேல் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும்” என முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான் குறிப்பிட்டுள்ளார்.

(tamil news thilakratna dilshan urged death sentences good)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites