ஹட்டன் நகரில் 713 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். (One person arrested 713 milligrams heroin Hatton)
ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் இருந்த நபர் ஒருவரை சோதனை செய்த போது, குறித்த நபரிடம் இருந்து ஆறு சிறிய பக்கெட் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மிகவும் சூட்சபமான முறையில் உடம்பில் மறைத்து வைத்து கொண்டு வந்த போது ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் குறித்த பஸ்ஸை சோதனையிட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஹெரோயின் பக்கெட்டுக்கள் கொட்டகலை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் ஹெரோயின் பக்கெட்கள் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- வடக்கு மாகாணத்தில் இரண்டு நாட்கள் மின்சாரம் முற்றாகத் தடை
- மயங்கி விழுந்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்; குடும்பத்தினர் நிர்க்கதி
- நாரஹேன்பிட்டியவில் பெண்ணின் உடம்பை தடவிய பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக சிக்கினர்
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; One person arrested 713 milligrams heroin Hatton