நேற்றிரவு(11-07-2018) 8.45 அளவில் கம்பஹா தரலுவ பகுதியின் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். Garment Factory Two Female Staff Suicide Reason Unclear
புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே மேற்படி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என்பதால் பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது வேறு ஏதாவது காரணம் இந்த தற்கொலைகளுக்கு பின்னால் உள்ளதா என விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு 2893 கோடி ரூபா நஷ்டம்
- நோர்வூட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
- கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி
- யாழில். சிறுவன் செய்த செயல்; பொலிஸார் விசாரணை
- பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு
- கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)
- 11 வயது சிறுமியை வர்த்தகர் துஷ்பிரயோகம்; கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்