இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
1072
Today Horoscope 10-07-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 26ம் தேதி, ஷவ்வால் 25ம் தேதி,0
10.7.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி மாலை 4:07 வரை;
அதன் பின் திரயோதசி திதி, ரோகிணி நட்சத்திரம் இரவு 1:37 வரை;
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
பொது : பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு

.

மேஷம்:

குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று முன்னேறுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

 

ரிஷபம்:

மதிநுட்பத்துடன் செயல்பட்டு சோதனைகளை வெல்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பெருகும். மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்:

திட்டமிட்டபடி செயல்கள் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்..

கடகம்:

அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத் தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை சரிசெய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். நண்பரால் உதவி உண்டு.

சிம்மம்:

உங்களின் நற்செயலை மற்றவர் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பெண்களுக்கு உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கன்னி:

கடந்த கால நற்செயலுக்கான நற்பலன் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பன்டமங்கு அதிகரிக்கும். பணக்கடனில் பெரும்பகுதி அடைபடும். பெண்கள் அக்கம்பக்கத்தினனின் அன்பை பெறுவர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.

துலாம்:

சிரமம் குறுக்கிட்டாலும் முயற்சிக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:

உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். லட்சியம் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.

தனுசு:

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். வருமானம் உயரும். பெண்களுக்கு வீட்டுத் தேவை குறைவின்றி நிறைவேறும். ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

யாருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் வீட்டுச் செலவுக்கு ததண்டாட நேரிடலாம். நண்பரால் உதவி கிடைக்கும்.

கும்பம்:

குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சி கண்டு மற்றவர் வியப்படைவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவர். விருந்து விழாவில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

மீனம்:

பெருந்தன்மையுடன் நடந்து சுய கவுரவம் பாதுகாப்பீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்