(Tamilnews Kesalgama Oya Hatton lady body recovered Jhon delari)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென். ஜோன்டிலரி பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் ஹட்டன் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ராமமூர்த்தி பார்வையிட்டதன் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று முற்பகல் (09) கண்டுபிடிக்கப்பட்டு, நோர்வூட் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியில் உள்ள தேயிலை மலைக்கு வேலைக்கு சென்றவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
25 அல்லது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் ஹட்டன் பதில் நீதவான் அவ்விடத்திற்கு வருகை தந்த பின்னர் சடலம் நீரிலிருந்து எடுக்கப்பட்டது.
இதன்பின்னர் பதில் நீதவானால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
மீட்கப்பட்ட சடலத்தில் பெண்ணின் வாய் மற்றும் கழுத்து பகுதி பெண் அணிந்திருந்த சல்வார் துப்பட்டாவினால் இறுக்கப்பட்டிருந்தது.
குறித்த சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இம் மரணம் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(Tamilnews Kesalgama Oya Hatton lady body recovered Jhon delari)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- ஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்