ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ”சர்கார்” படத்தில் புகைக்கும் போஸ்டரை விளம்பரபடுத்தியதற்கு இழப்பீடாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம், அதற்கு பதில் அளிக்கும்படி படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.(Health department issued notice Sarkar movie team)
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் படம் ”சர்கார்”. இதில் விஜய்க்கு ஜோடியாக கீா்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிகின்றனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது கடந்த ஜூன் 21-ம் திகதி அன்று வெளியானது.
அப்புகைப்படத்தில் விஜய் புகைப்பது போன்ற போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த போஸ்டரை நீக்கக்கோரி பல அரசியல் கட்சியினர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புகைப்பது போன்ற போஸ்டரை சன் பிக்சர்ஸ் நீக்கியது.
எனினும், புகைப்பது போன்ற போஸ்டரை விளம்பரப்படுத்தியதற்காக ரூபாய் 10 கோடி இழப்பீடு வழங்கக்கோரி அடையாறு புற்றுநோய் மருத்துவ மையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை, உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்தது. விசாரணைக்கு பின்பு, ”சர்கார்” பட இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு இன்னும் 2 வாரங்களில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Photo Credit : Google Image
<MOST RELATED CINEMA NEWS>>
* மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!
* விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!
* ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!
* சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!
* திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!
* விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!
* மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!
* காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!
* பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!
Tags :-Health department issued notice Sarkar movie team
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Our Other Sites News :-
நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுகொலை : புறக்கோட்டையில் பதற்றம்