21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் அரை இறுதியை எட்டியுள்ளன. முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவற்றுடன் முதல் முறையாக கோப்பையை வெல்வதற்காக பெல்ஜியம், குரேஷியா ஆகியவை அரை இறுதியில் விளையாட உள்ளன. fifia foot ball team latest news semi final number one web site
கடந்த மாதம் 14ம் தேதி ஆரம்பித்த போட்டி அரை இறுதியை எட்டியுள்ளது. 7 முன்னாள் சாம்பியன்கள் உள்பட 32 நாடுகள் இந்த உலகக் கோப்பையில் களமிறங்கின. அதில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறியது.
அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகிய அணிகள் நொக் அவுட் சுற்றில் வெளியேறின. உருகுவே, பிரேசில் ஆகியவை கால் இறுதி ஆட்டத்தில் வெளியேறின. முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
10 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்கும் முதல் அரை இறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
11ம் தேதி இரவு 11.30 மணிக்கு மாஸ்கோவில் நடக்கும் மற்றொரு அரை இறுதியில் குரேஷியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றுள்ள பிரான்ஸ், 6 ஆவது முறையாக அரை இறுதிக்கு நுழைந்துள்ளது.
15வது முறையாக உலகக் கிண்ண போட்டி தொடரில் விளையாடுவதோடு கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியிலும் விளையாடியது.
பெல்ஜியம் அணி 13வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. 1986க்குப் பிறகு இரண்டாவது முறையாக அரை இறுதிக்கு நுழைந்துள்ளது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளiயாடியது.
15வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் இங்கிலாந்து அணி, 1966ல் உலகக் கோப்பையை வென்றது. மூமூன்;றாவது முறையாக அரை இறுதிக்கு நுழைந்துள்ளது. 1990க்குப் பிறகு மீண்டும் அரை இறுதியில் விளையாட உள்ளது.
குரேஷியா தனி நாடானப் பிறகு 5வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. 1998ல் அரை இறுதியில் விளையாடி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 2002, 2006, 2014ல் முதல் சுற்றிலேயே வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
fifia foot ball team latest news semi final number one web site
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com