யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கனை மற்றும் சுழிபுரம் ஆகிய இடங்களில் பதின்ம வயதுச் சிறுமிகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. (young man sexually abused two young girls Jaffna)
இதுகுறித்து பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி ஒருவருக்கு கருக்கலைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் 21 வயது இளைஞர்கள் இருவருக்கு எதிராக முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
சுழிபுரம் மத்தி, பல்லசுட்டி என்ற இடத்தில் 15 வயதுச் சிறுமியை 21 வயதான இளைஞன் தனது வர்த்தக நிலையத்துக்குள் வைத்து துஷ்பிரயோகப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி கர்ப்பமடைந்துள்ள நிலையில், உறவினர்களும் அந்த இளைஞனும் சேர்ந்து சிறுமியை எச்சரித்து சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து சிலர், அந்த இளைஞனுடன் பேசிய போது, அவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் சங்கானை சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு வழங்கியுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சங்கானை விழிசிட்டி என்ற இடத்தில் 21 வயதுடைய இளைஞன் 14 வயதுச் சிறுமியுடன் சட்டத்துக்கு புறம்பாக இணைந்து வாழ்ந்தார்.
ஊரவர்களின் எதிர்ப்புக் காரணமாக சில நாள்களில் அந்த இளைஞன் பிரிந்து சென்றுவிட்டதாகவும் சிறுமியின் எதிர்காலம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு வழங்கப்பட்ட மற்றொரு முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சங்கானை பிரதேச பாதுகாப்பு அலுவலகர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றின் அறிவுறுத்தலைப் பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; young man sexually abused two young girls Jaffna