அரசாங்கம் கொடுத்த சுதந்திரத்தில் எதிர்க்கட்சி அரசியல் லாபம் தேடுகிறது – சஜித் குற்றச்சாட்டு

0
456
Sajith accused opposition party using good governance freedom

(Sajith accused opposition party using good governance freedom)

நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்தாமல் எதிர்க்கட்சி அதனை அரசியல் இலாபம் தேடும் நோக்கில் பயன்படுத்தி வருவதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச குற்றம்சுமத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நல்லாட்சி அரசாங்கம் செய்துள்ள அபிவிருத்தி என்னவென்று கேள்வி எழுப்பிக் கொண்டு நாட்டில் போராட்ட நிலையை உருவாக்கி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

உதா கம்மான திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமகாராம, உத்தகந்தர ஆகிய பிரதேசங்களில் நூறுநாள் திட்டத்திற்கு அடிக்கல் நட்டும் நிகழ்வும் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

864 வது உதா கம்மான திட்டம் இதுவென்பதுடன், இந்தியாவின் வீட்டு உதவித் திட்டத்தின் கீழ் இது முன்னெடுக்கப்படுகின்றது.

(Sajith accused opposition party using good governance freedom)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites