நல்லூர் கந்தன் ஆலயத்தின் முன்னால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்ணாவிரதம்!

0
615
Disappeared People Relations Protest Near Nallur Temple

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக உதாசீனம் செய்யப்பட்டு வரும் நிலையில் அவர்களின் போராட்டங்கள் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Disappeared People Relations Protest Near Nallur Temple

இந்நிலையில் யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று இடம்பெறும் இந்த போராட்டத்தில் நல்லூர்க் கந்தன் ஆலய மதிய நேர பூசையின் போது 108 தேங்காய் உடைத்து 50 தீச்சட்டிகளும் எடுக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

நல்லூர் கந்தனின் ஆலயத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு பகுதி உறவினர்கள் திரண்டு இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இந்த போராட்டம் தொடர்பில் அதிகார தரப்பினர் எந்த வகையான விபரங்களையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites